அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்!

You are currently viewing அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்!

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறையை எதிர்த்து  சுவிஸில்  நடைபெற்ற போராட்டம்

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவை அவமதித்ததாகவும், அவரது திருவுருவச் சிலை அகற்றப்பட்டதையும் கண்டித்தும் சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் நேற்று (02.10.2026) கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

பேர்ன் நகரின் Bahnhofplatz, 3011 Bern பகுதியில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தமது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழர்களின் நினைவுகளை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பதும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சுவிஸ் தமிழர் அரசியல் துறை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழ்ப் பெண்கள் அமைப்பு – சுவிஸ் ஆகிய அமைப்புகளின் இணைந்த ஏற்பாட்டில் இந்தக் கண்டனப் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 1
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 2
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 3
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 4
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 5
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 6
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 7
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 8
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 9
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 10
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 11
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 12
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 13
அடக்குமுறையை எதிர்த்து சுவிஸில் நடைபெற்ற போராட்டம்! 14
பகிர்ந்துகொள்ள

Leave a Reply