அடுத்தமாதம் தீவிர சிகிச்சைப் பிரிவில் 1000 தொற்றாளர்கள்!!

அடுத்தமாதம் தீவிர சிகிச்சைப் பிரிவில் 1000 தொற்றாளர்கள்!!

ஒன்ராறியோ மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெப்ரவரி மாத தொடக்கத்தில் 1,000 ஐ தாண்டக் கூடும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோவின் கோவிட் -19 அறிவியல் அட்டவணை இன்று காலை சமீபத்திய கணிப்புகளை வெளியிட்டது. இது வரவிருக்கும் மாதங்களில் மாகாணத்தின் மோசமான நிலையை விவரிக்கிறது.

தடுப்பூசி நடைமுறைக்கு வருமுன் கொரோனா உயிரிழப்புகள், முதல் அலையின் மொத்தத்தை விட இரண்டாவது அலையில் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி நடுப்பகுதியில் 500 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சையில் இருப்பார்கள் என்றும், மேலும் மூன்று சதவீத அதிகரிப்புடன், ஒரு மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 1,000 ஐ தாண்டும்.

பகிர்ந்துகொள்ள