அணு ஆயுதப் போருக்குத் தயார்! வடகொரியா எச்சரிக்கை !

You are currently viewing அணு ஆயுதப் போருக்குத் தயார்! வடகொரியா எச்சரிக்கை !

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிற்கிடையிலான இராணுவ கூட்டுப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வடகொரியா தொடர்ச்சியான எச்சரிப்புக்களை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகியன வடகொரியாவின் மிரட்டல்களுக்கு மேலும் எண்ணெய்யை ஊற்றும் வகையில் தமது இராணுவ பயிற்சிகளை அதிகரித்து வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வடகொரிய பாதுகாப்புத் துறையினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றில் வடகொரிய அதிபர் ‘கிம்’ தெரிவித்த கருத்தாவது , “வளைகுடாப் பகுதியில் எமக்கு ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் தொடர் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாம் எச்சரிக்கைகளை விடுத்த போதிலும் அவர்கள் தமது இராணுவ பயிற்சிகளை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் பற்றிய புகைப்படங்களை நாம் பார்க்கும் போது எமக்கு பயத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் அவ்வாறான சக்தி வாய்ந்த ஆயுதங்களை பயிற்சிகளுக்கு பயன்படுத்தி வருகின்றாகள்.

இந்த அறிக்கையில் ஒன்றை மட்டும் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன். எமது வடகொரிய நாடு அனைத்து வகையிலான போருக்கும் முழுமையான தயார் நிலையில் தான் உள்ளது. அணு ஆயுத போருக்கு நாம் முழு நாடாகவும் தயார் நிலையில் இருக்கின்றோம். தென்கொரியாவை ஒரு நொடிப் பொழுதில் அழிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன.

அமெக்கா வீணாக நம்மை சீண்டுகின்றது”. என வடகொரிய அதிபர் ‘கிம்’ மேற்படி அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments