வட தமிழீழம் – 20.06.2025
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான சர்வதேச நீதியை வலியுறுத்தும் வகையில்,
“அணையா விளக்கு” என்ற கருப்பொருளில்,
மூன்று நாள் தொடர்ச்சி போராட்டம் எதிர்வரும் ஜூன் 23 முதல் 25 வரை
செம்மணி வளைவுப் பகுதியில் நடைபெறவுள்ளதாக மக்கள் செயல் என்ற இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழர் பண்பாட்டில்,
துன்பங்களைச் சுடரால் சொல்லும் ஒரு அழியாத நினைவுச் சின்னமே – அணையா விளக்கு.
அதே மரபினை முன்வைத்து,
மறைக்கப்பட்ட நியாயங்களுக்கும், மறுக்கப்பட்ட உண்மைகளுக்கும் ஒளி வீசவே,
இந்தப் போராட்டம் அழிவில்லாத விடுதலை வேண்டுகோளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வுகள்:
ஜூன் 23 & 24 – அடையாள உண்ணாவிரதம், கலை நிகழ்வுகள்
- சுழற்சி அடிப்படையிலான அடையாள உண்ணாவிரதம்
- செய்திப்படக் கண்காட்சி
- மக்கள் கையெழுத்து திரட்டல்
- கவிதை, கதை வாசிப்பு
- நாடகம் மற்றும் காணொளி வடிவ நிகழ்வுகள்
ஜூன் 25 – மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
இந்த நாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk யாழில் வருகை தரும் நாளாகவும் இருப்பதால், அவரது கவனத்தை ஈர்க்கும் விதமாக,
மனிதப் புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை உரத்துசொல்லல் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஒளிவிழாக்கள் நடைபெறும்.
1995 முதல் 2025 வரை,
செம்மணியில் பல்வேறு இடங்களில் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டாலும்,
அவை தொடர்பான உண்மைகள் இன்று வரை மர்மத்திலும், மறைப்பிலும் இருக்கின்றன.
“இவையெல்லாம் இனவழிப்புக்கான சாட்சிகள்.
ஆனால் இன அழிப்பை செய்த சிங்கள பேரினவாதிகளின் கோரமுகம் வெளிச்சத்துக்கு வரவில்லை” என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அழைப்பு:
“செம்மணி மட்டும் அல்ல…
வட மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து புதைகுழிகளுக்குமான நீதி வேண்டியும்,
சர்வதேச ஒளியை இவ்விடயத்தில் திருப்ப வேண்டியும்,
இந்த போராட்டத்தில் அனைவரும் இணைவோம்!”
என்பது அமைப்பின் உரத்த அழைப்பு.