அதிர்ச்சித் தகவல் ; கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது!

அதிர்ச்சித் தகவல் ; கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் லூக் மான்டேனியர் (Luc Montagnier – AIDS வைரஸ்) கூறியுள்ளார்.

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஊஹான் நகரை சிதைத்தது. சுமார், சீனாவில் மட்டும் 82,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதித்தனர். அந்த நாடுகளில் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருந்தது. அதேபோல, அமெரிக்காவிலும் ஏழு லட்சம் பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் AIDS வைரஸைக் கண்டுபிடித்ததற்காக 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற “Montagnier” பிரெஞ்சுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த வைரஸ் உருவானதாக அவர் கூறியுள்ளார்.

AIDS வைரஸின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டில் இருப்பதாகக் கூறும் “Montagnier” ஊஹானில் உள்ள தேசிய உயிரிகாப்பக ஆய்வகத்தில் நடந்த விபத்தால் கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments