அதி வணக்கத்திற்குரிய ஆண்டகையின் உடல் விதைக்கப்பட்டது!

அதி வணக்கத்திற்குரிய ஆண்டகையின் உடல் விதைக்கப்பட்டது!

தமிழினத்தின் சாட்சியாக நின்று திருச்சபை சட்டங்களையும் கடந்து மக்களை நேசிக்கும் மனிதனாக வாழ்ந்த பேராயர் அதிவணக்கத்திற்குரிய இராசப்பு யோசப் ஆண்டகை அவர்களின் புகழுடல் பல்லாயிரம் மக்களின் கண்ணீரோடு விதைக்கப்பட்டது. தமிழினத்திற்கு சிறீலங்காவால் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தொடர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்கு எதிராக குரல் கொடுத்து உண்மையான மனிதனாய் உலாவந்த தமிழின சாட்சியின் உடல் விதைக்கப்பட்டது.

எந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து முன் உதாரணமாக மக்களின் மனங்களை வென்றாரோ அதே வழியில் மதங்களை கடந்து தமிழராய் நாமும் அவரின் உண்மையின் குரலை அணையவிடாது ஓங்கி ஒலிக்க செய்வோம்.

அதுவே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகவும் அமையும்.

அதி வணக்கத்திற்குரிய ஆண்டகையின் உடல் விதைக்கப்பட்டது! 1
அதி வணக்கத்திற்குரிய ஆண்டகையின் உடல் விதைக்கப்பட்டது! 2
அதி வணக்கத்திற்குரிய ஆண்டகையின் உடல் விதைக்கப்பட்டது! 3
அதி வணக்கத்திற்குரிய ஆண்டகையின் உடல் விதைக்கப்பட்டது! 4
பகிர்ந்துகொள்ள