அத்துமீறிய மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிப்பு மக்கள் போராட்டம்!

அத்துமீறிய மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிப்பு மக்கள் போராட்டம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் கடலட்டை தொழில் ஆகியவற்றை நிறுத்தக்கோரி மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இன்று காலை மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதுடன் அத்துமீறி அனுமதி அற்ற முறையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வடமராட்சி கிழக்கு பகுதியில் வாடிகள் அமைத்து அட்டைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் வந்து பூசை வழிபாடுகளுடன் தொழில் செய்ய தொடங்கியுள்ளார்கள்.


இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரிடம் மனு கையளித்தள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments