அனர்த்த இடத்தில் மீண்டும் இரு நிலச்சரிவுகள்!

அனர்த்த இடத்தில் மீண்டும் இரு நிலச்சரிவுகள்!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து மீட்ப்புப்பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், மேலும் இரு நிலச்சரிவுகள் அதே இடத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலச்சரிவு அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்ட இடங்களில், குறிப்பாக ஏற்கெனவே பாதிக்கப்பட்ட இடத்தோடு தொடர்புபட்ட இடங்களிலேயே இப்புதிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக வெடிப்பு ஒன்று பாரிய சத்தத்தோடு ஏற்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து எழுப்பப்பட்ட அபாய ஒலியை தொடர்ந்து மீட்புப்பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால், மேலதிக அவலங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள