அனுர அரசு தமிழின அழிப்பிற்கு பொறுப்பு கூறவேண்டும்!

You are currently viewing அனுர அரசு தமிழின அழிப்பிற்கு பொறுப்பு கூறவேண்டும்!

(08/07/25)பாராளுமன்ற அமர்வில் செம்மணி மனித புதைகுழி குறித்து  ஆற்றிய உரையின் ஒரு பகுதி:-

இப்புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய சந்திரிகா காலத்தில் அந்த அரசோடு இணைந்திருந்து தமிழருக்கெதிரான யுத்தத்தை தொடரவேண்டும் என வலியுறுத்திய ஜேவிபியினரும் இதற்கு பொறுப்புகூறவேண்டியவர்களே!!
ஒரு குற்றதுக்கு பொறுப்புகூறவேண்டிய தரப்பே இன்று அதை விசாரிக்க முற்படுவது இயற்கை நீதிக்கு முற்றிலும் மாறானது.
உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என நீங்கள் (ஜேவிபி) உண்மையாகவே விரும்பினால், அது சுயாதீன சர்வதேச விசாரணைப்பொறிமுறையொன்றினூடாக மட்டுமே சாத்தியமாகும்.
-திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

———————————————-

“செம்மணியின் சூழ்நிலையைப் பாருங்கள். தமிழர்களின் நிலையைப் பாருங்கள். ஒரு அரசாங்கமாக நீங்கள் போரை ஆதரித்தீர்கள். நீங்கள் சந்திரிகா அரசாங்கத்துடன் அங்கமான ஒரு கட்சியாகவும் இருந்தீர்கள். மேலும் சந்திரிகா அரசாங்கம் செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பாகும். மனிதப் புதைகுழிகள் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

1996 அல்லது 97 ஆம் ஆண்டுகளில் இருந்தது.. பின்னர் 15 உடல்களை பற்றியே விசாரணைகளில் வெளிவந்தன. கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் எனது தந்தையார் கிருசாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் நலன்களைக் கவனித்த வழக்கறிஞர் என்பதால் இதை நான் அறிவேன். கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரது ஆவண அறிக்கையில்- செம்மணி பகுதியில் 500 முதல் 600 க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தாலும்- 15 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழியானது அந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ளன.

எனவே- குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பாக இருந்த அரசு – அப்போது கவலைப்படவே இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் விவரங்களை வழங்கி – தற்போதைய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து சுமார் 100 யார் தொலைவில் உள்ளதாக- அந்த இடங்களின் விவரங்களைக் கொடுத்த போதிலும் கவலைப்படவே இல்லை. அரசே குற்றம் சாட்டப்பட்ட தரப்பாக இருக்கும்போது இப்படிதான் நடக்கும்.

இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன். இது தமிழ் சிங்கள முஸ்லிம் விடயமாக இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைத்ததாக உணர்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு, நடந்த குற்றங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சட்டப்பூர்வத்தன்மையை நீங்கள் விரும்புகிறீர்களா? என்பதையே நான் கேட்க விரும்புகிறேன்.
அரசே குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பாக இருக்கும் போது- குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை இல்லாமல்- உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு நீங்கள் உண்மையானவர்களாக இருந்தாலும் கூட – செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் நீங்கள் உண்மையாக இருக்கமாட்டீர்கள் என்பதை நிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்ல முடியும். ஏனென்றால் நீங்கள் அனைவரும் போரை விரும்பினீர்கள். நீங்கள் அனைவரும் போரை ஆதரித்தீர்கள்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒருபோதும் வழக்குத் தொடரப்படாது என்றும் உண்மையை கண்டறிவதற்கு ஆணைக்குழு மட்டுமே உருவாக்கப்படும் என்றும் உங்கள் ஜனாதிபதியே தெரிவித்துள்ள நிலையில் – உடைந்த இந்த அரசை நீங்கள் சரிசெய்ய விரும்பினால், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்து செயற்படும் அரசாங்கம் உங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நீங்கள் செயலாற்றவேண்டும்”

பகிர்ந்துகொள்ள

Leave a Reply