அனைத்து தரப்பினரும் எங்களுடன் ஒத்துழைத்து பயணிக்க வேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

அனைத்து தரப்பினரும் எங்களுடன் ஒத்துழைத்து பயணிக்க வேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

யாழ்மாவட்ட தேர்தல் தொகுதியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகன நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கடந்த 15.08.2020 அன்று முள்ளிவாய்க்காலில் உறுதி உரை எடுத்து அரசியல் பயணத்தினை தொடங்கியுள்ளார்கள் இதன்போது அவர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு முதல் தடவையாக மக்கள் ஆணையினை வழங்கியுள்ள நிலையில் மக்களின் போராட்டத்திற்கும் உயிர்தியாகத்திற்கு மேல் மக்களுக்காக எந்த கொள்கையினை முன்வைத்து ஆணையினை கேட்டோமோ அந்த கொள்கைக்கு நேர்மையாக நாங்கள் செயலாற்றுவோம் என்ற உறுதி மொழியினை முள்ளிவாய்க்காலில் எடுத்துள்ளோம்.
முள்ளிவாயக்காலில் கொள்கையினை எடுத்ததற்கான நோக்கம் எங்கள் கொள்கைக்கு நேர்மையாக பயணிக்கின்ற வகையில் நாங்கள் உறுதி எடுத்துள்ளோம்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு இருக்கின்ற அரசியல் நிலமைகள் மிகவும் சவாலுக்குள்ளே தமிழ் இனத்தினை தள்ளுகின்ற நிலமையினை உருவாக்கியுள்ளது.
எந்த தரப்பு எங்களை திட்டமிட்டு முள்ளிவாய்க்காலில் அழிக்க முற்பட்டதோ அந்த தரப்பு கடந்த 10 ஆண்டுகளாக காப்பாற்றப்பட்டு இன்று ஆட்சி பீடத்திற்கு ஏறியுள்ள நிலையினை காணக்கூடியதாக இருக்கின்றது.
தமிழ் மக்களை பொறுத்தமட்டில் இனியும் ஏமாந்து பிழையான பாதையில் தெரிந்தோ தெரியாமலோ செல்வது ஒரு தெருவல்ல தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு ஒரு நேர்மையான அரசியலை காட்டிவந்துள்ளோம் அதற்கு ஆணை கிடைத்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் எந்த மக்களை மக்களின் கொள்கையினை அழித்து ஒழித்து தமிழர்களின் இலட்சிய பாதையினை முற்றுமுழுதாக கைவிடும் நோக்கத்துடன் செயற்பட எண்ணியவர்களுக்கு எங்களின் தேர்தல் அங்கிகாரம் ஊடாக அவர்களின் முயற்சிகள் படுதோல்லி அடைந்து இருக்கின்ற செய்தியினைத்தான் எங்கள் தெரிவு காட்டுகின்றது.
மக்கள் எங்களிடம் காட்டியிருக்கும் நம்பிக்கையினை நாங்கள் முன்கொண்டு செல்வதற்கு தமிழ் தேசத்தின் அங்கிகாரத்திற்கும் தமிழ்இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதியினை கோருகின்ற நடவடிக்கைக்கும் தமிழ் தேசத்தினை கட்டி எழுப்பி சுய பொருளாதாரத்தினை கட்டி எழுப்புகின்ற முயற்சியினை முன்னெடுக்கின்ற பொழுது அனைத்து தரப்புக்களும் ஒத்துழைத்து எங்களுடன் பயணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments