அன்பான நோர்வே வாழ் மக்களே!

அன்பான நோர்வே வாழ் மக்களே!

அனைவருக்கும் வணக்கம்🙏

கொரோனா உயிர்கொல்லி கிருமி ஏற்படுத்திய நெருக்கடிகள் தாயக உறவுகளையும் விட்டு வைக்கவில்லை அன்றாட உழைப்பை நம்பி வாழ்கையை நடாத்திவரும் எமது உறவுகள் ஊரடங்கு சட்டம் காரணமாக எந்த வருமானமும் இன்றி பட்டினிச்சாவை எதிர்கொள்ளக்கூடிய அச்ச சூழ்நிலையை எதிர்நோக்கி உள்ளதால் முதற்கட்டமாக அனைத்து நோர்வே தமிழ்த்தேசிய அமைப்புக்களும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் உதவி அதிகமாக செய்யப்பட வேண்டிய பேரிடர் எழுந்துள்ளதால் எமது மக்கள் எதிர்கொள்ளப்போகும் பாரிய பட்டினிப்போரை தடுத்து நிறுத்த நோர்வேயின் தமிழ்த்தேசிய அமைப்புக்கள் இணைந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக மனிதநேயப்பணியை முன்னெடுக்க கரம் கோர்த்துள்ளோம்.

நீங்களும் உடனடித்தேவையை பூர்த்தி செய்ய முன்வாருங்கள் உங்கள் உதவிகளை இங்கே தரப்பட்டிருக்கும் இலக்கத்தினோடு பங்களிப்பு செய்யுங்கள்.

Vipps:602172
வங்கி இலக்கம்:15063279886

உங்கள் பங்களிப்பு கிடைக்கப்பெற்றதும் உடனுக்குடன் இங்கு பதிவேற்றம் செய்யப்படும்.

எமது மக்களின் கவசமாய் நிற்போம்!
அவர்களின் சுவாசத்தொற்றை
தடுப்போம்!
வாருங்கள் உதவிக்கரம்
கோர்ப்போம்!

மேலதிக விபரங்களுக்கு
TLF: 45399417

நன்றி🙏

பகிர்ந்துகொள்ள