அன்பார்ந்த நோர்வே வாழ் தமிழ்மக்களே வணக்கம்!

அன்பார்ந்த நோர்வே வாழ் தமிழ்மக்களே வணக்கம்!

தாயகத்தில் தற்போதைய கொரொனா நோய்த்தொற்றுப் பேரிடர்கால முடக்க நிலையில் நாளாந்த உழைப்பை நம்பிவாழும் எம் உறவுகளுக்கு உதவும் மனிதநேயப்பணி தொடர்கின்றது. தற்போதைய அசாதாரணநிலைமை அகன்று சாதாரணநிலைமை திரும்பி சகசவாழ்வு தொடங்கும்வரை எம்மவர்க்கு நாமே கரம் கொடுக்க வேண்டியுள்ளது.


நோர்வேவாழ் தமிழ்மக்களின் ஆதரவுடன் நோர்வேயில் உள்ள தமிழ்த்தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் இந்த மனிதாபிமானப் பணியானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதுவரையிலும்,

கட்டைக்காடு, போக்கறப்பு, வெற்றிவைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை ஆகிய இடங்களில் 100 குடும்பங்களுக்கும்


மன்னார், முசலி, அரிப்பு வடக்கு, அரிப்பு கிழக்கு, வேளாங்கன்னிநகர், சவேரியன்புரம், பொற்கேணி, மருதமடு,ஆகிய இடங்களில் 110; குடும்பங்களுக்கும்

கிளிநொச்சி, தேராவில், புன்னைநீராவியடி, ஊற்றுப்புலவு, தேவிபுரம் ஆகிய

இடங்களில் 307 குடும்பங்களுக்கும்

அம்பாறை, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில் ஆகிய இடங்களில்

327 குடும்பங்களுக்குமாக 844 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தேவைகள் அதிகம்! தேசம் காக்க ஆவன செய்வீர்!!!

Vipps 602172  VIPPS: 602172
Bank konto: 15063279886

Polarvin poopaalamதொடர்புகளுக்கு: 453 99 417

[email protected]


உங்களது பங்களிப்பு கிடைக்கப்பெற்றதும் உடனுக்குடன் தமிழ்முரசம் நேயர்வட்ட Viber குழுமத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

எமது மக்களின் கவசமாய் நிற்போம்!
அவர்களின் சுவாசத்தொற்றை தடுப்போம்!

வாருங்கள் உதவிக்கரம் கோர்ப்போம்!

நன்றி🙏

Tamilmurasam.com 

News.tamilmurasam.com 

Radio.tamilmurasam.com

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments