அமெரிக்காவின் 13 மாகாணங்களில் பற்றியெரியும் காட்டுத் தீயால் பேரழிவு!

You are currently viewing அமெரிக்காவின் 13 மாகாணங்களில் பற்றியெரியும் காட்டுத் தீயால் பேரழிவு!

அமெரிக்கா -ஒரேகான் மாகாணத்தில் காட்டுத் தீயால் சுமார் 3 இலட்சத்து 40ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காடுகள் எரிந்துள்ளன.

அமரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீயில் ஒன்றாகக் கருதப்படும் ஒரேகான் காட்டுத் தீ பற்றியெரிந்துவரும் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பல ஆயிரம் மக்களை அங்கிருந்து வெளியேறத் தயாராகுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் 13 மாகாணங்களில் தற்போது 80 பெரிய காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் சுமார் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் காடுகள் எரிந்து வருகின்றன. பெரும்பாலும் மேற்கு மாகாணங்களில் காட்டுத் தீ பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக தேசிய நடமாடும் தீயணைப்பு மையம் (NIFC ) தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்கா முழுவதும் 80 பெரிய காட்டுத்தீ பற்றியெரியும் நிலையில் தீயணைப்புப் பணிகளில் கிட்டத்தட்ட 20,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒரேகான் மாகாணத்தை அடுத்து கலிபோர்னியா, இடாஹோ மற்றும் அலாஸ்கா ஆகியவை மாகாணங்களிலும் பெருமளவு இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments