அமெரிக்காவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா: ஒரே நாளில் 70,914 பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா: ஒரே நாளில் 70,914 பேர் பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,15,991 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் மேலும் 958 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,40,101 ஆக உயர்ந்து உள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 39,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,70,909 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனா தொற்றால் 1,261 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 75,523 ஆக உயர்ந்து உள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments