அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரன்!

You are currently viewing அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரன்!

அமெரிக்காவில் சிறையில் இருந்து வந்த நபரொருவர் பெண்ணை கொலை செய்து அவரின் இதயத்தை வெட்டி சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நபர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (44). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைதாகி 20 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.

ஆனால், ஆண்டர்சன் மூன்று ஆண்டு தண்டனை அனுபவித்த நிலையில், முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், விடுதலையாகி வந்த சில நாட்களிலேயே ஆண்டர்சன், ஓக்லஹோமா மாகாணத்தில் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டர்சன், ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணின் இதயத்தை வெட்டிக் எடுத்து தனது அத்தை மற்றும் மாமாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்று உருளைக்கிழங்குடன் சமைத்து அவர்களுக்கு பரிமாறியுள்ளார்.

அதன் பின்னர், அத்தை, மாமா மற்றும் 4 வயது குழந்தையையும் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆண்டர்சனை பொலிசார் கைது செய்த நிலையில், ஆண்டர்சனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments