அமெரிக்கா – தென் கொரியா போர்ப் பயிற்சிக்கு முன் தனது படைகளை தயார்படுத்துகிறது வட கொரியா!

You are currently viewing அமெரிக்கா – தென் கொரியா போர்ப் பயிற்சிக்கு முன் தனது படைகளை தயார்படுத்துகிறது வட கொரியா!
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ஆத்திரமூட்டும் எந்தவொரு நடவடிக்கைகளையும் சமாளிக்க முழுமையான தயார் நிலையில் இருக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தென்கொரியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த கூட்டுப் போர் பயிற்சிக்கு முன்னதாக இரு நாடுகளில் இராணுவ உயர் மட்ட அதிகாரிகளின் சந்திப்பை அடுத்து கிம் ஜாங் உன் இவ்வாறான முன்னெச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாக வட கொரிய ஊடகங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே நிலவிவரும் பதற்ற நிலையைத் தணித்து மீண்டும் சுமூக உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக இரு நாட்களுக்கு முன்னரே செய்தி வெளியாகியிருந்தது.

இந்த முயற்சியின் ஒரு அங்கமாக வட கொரியாவால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்பாடல் மையத்தை மீண்டும் திறக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேற்படுத்தும் நோக்கில் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வட கொரியா சம்மதித்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமையைக் குறைக்கும் என நம்பிக்கையை எழுப்பியிருந்தது.

அத்துடன், வொஷிங்டனுடனான அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்துக்கும் வட கொரியாவை அழைத்து வருவதற்கான சாத்தியத்தை இது ஏற்படுத்தலாம் எனவும் கருதப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே வட கொரியா தனது இராணுவத்தை உஷார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

தென்கொரியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வருடாந்த கூட்டுப் போர் பயிற்சிக்கு பதிலளிக்கும் வகையில்

வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தலாம் அல்லது பதற்றத்தை அதிகரிக்கும் வேறு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என சா்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜூலை 24 முதல் 27-ஆம் திகதிவரை வட கொரிய இராணுவத் தளபதிகள் முக்கிய அரச அதிகாரிகளை கிம் ஜாங் உன் சந்தித்து பேசியதாக வட கொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்புக்களில் இராணுவத்தை வலுப்படுத்துவது, மற்றும் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து ஆராயப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் எந்தவொரு ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளையும் தாக்குதலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார் நிலையில் இருக்குமாறு இதன்போது கிம் ஜாங் உன் படைத் தளபதிகளை வலியுறுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments