அமெரிக்க எரிகுண்டு! 50 ஆண்டுகள் சிகிச்சை!!

You are currently viewing அமெரிக்க எரிகுண்டு! 50 ஆண்டுகள் சிகிச்சை!!

வியட்னாம் மீதான ஆக்கிரமிப்பின்போது அமெரிக்கப்படைகள் வீசிய “நேபாம்” எரிகுண்டுகளால் பாரிய எரிகாயங்களுக்குள்ளான வினாமிய சிறுமியொருவரின் புகைப்படம், வியட்னாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை விரைந்து இடைநிறுத்த பிரதான காரணமாக இருந்தமை உலக வரலாறாக இருக்கிறது.

குறித்த வியட்னாமிய சிறுமி காப்பாற்றப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டு, அவரது உடலிலிருந்து எரிகாயங்களுக்காக கடந்த 50 ஆண்டுகளாக தொடர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்த நிலையில், 50 ஆண்டுகளின் பின் அவருக்கான சிகிசிச்சைகள் முற்றதாக நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1972 ஆம் ஆண்டில் வியட்நாமிய குடியிருப்பொன்றின்மீது அமெரிக்க விமானப்படையினர் வீசிய “நேபாம்” எரிகுண்டினால், அப்போது 9 வயதே நிரம்பியிருந்த “Phan Thị Kim Phúc” என்ற குறித்த சிறுமி, எரிகாயங்களோடு அலறியபடி வீதியில் ஓடிவரும் காட்சியை, அப்போது “Associeted Press” நிருபராக களத்தில் நின்ற “Nick Ut” தனது புகைப்படக்கருவியில் எடுத்து வெளியிட்டிருந்தார். மிகவும் உலகப்புகழ் பெற்ற இப்புகைப்படம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியதும், அமெரிக்கா முழுவதும் அமெரிக்க அரசுக்கெதிராக போராட்டங்கள் முனைப்பு பெற்றதும், வியட்நாமிலிருந்து அமெரிக்கா பின்வாங்குவதை விரைவுபடுத்தின.

அமெரிக்க எரிகுண்டு! 50 ஆண்டுகள் சிகிச்சை!! 1
எரிகாயங்களுக்கு உள்ளான “Phan Thị Kim Phúc”, மற்றும் அவரை அத்தருணத்தில் புகைப்படம் பிடித்த செய்தியாளர் “Nick Ut”

தற்போது 59 வயதாகும் “Phan Thị Kim Phúc”, கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மியாமியிலுள்ள வைத்தியசாலையொன்றில் எரிகாயங்களுக்கான சிகிச்சைகளை பெற்று வந்திருந்தார். முதுகில் பாரிய எரிகாயங்களை கொண்டிருந்தமையால், சிகிச்சைகள் சவாலுக்குரியவையாக இருந்ததாக குறிப்பிடும் “Phan Thị Kim Phúc”, தற்போது தனது கணவருடன் கனடாவில் குடியேறி சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments