அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் 6 பேர் சுட்டுக்கொலை!

You are currently viewing அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் 6 பேர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 246-வது சுதந்திர தினம் இன்று (இந்திய நேரப்படி நேற்று) கொண்டாடப்பட்டது. சுதந்திரதினத்தையொட்டி அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகோகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திரதின அணிவகுப்பு இன்று காலை 10 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) தொடங்கியது

அப்போது, சுதந்திரதின அணிவகுப்பில் கலந்துகொண்டிருந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் துரிதபடுத்தியுள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments