அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானம் – பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்!

You are currently viewing அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானம் – பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்!

ஈழத்தமிழர் விவகாரத்தில், அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானத்தை இந்திய மத்திய அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியில், இந்தியப் பெருங்கடலில் சீனமயமாக்கல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், தமிழ் ஈழத்தைக் காக்கவும், ஈழத்தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டவும் இந்தியா தவறினால், இந்தியப் பெருங்கடலில் ஆளுமையை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் பிரேரணையை கருத்தில் கொண்டு உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் உருவாக்கியது போல், பங்களாதேஷ் என்ற நாட்டை இந்தியா உருவாக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை, இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments