அமெரிக்க விமானப்படைத்தளத்தில் துப்பாக்கிச்சூடு! இரு வீரர்கள் பலி!!

அமெரிக்க விமானப்படைத்தளத்தில் துப்பாக்கிச்சூடு! இரு வீரர்கள் பலி!!

அமெரிக்காவின் வட “Dakota” பகுதியிலிருக்கும் “Grand Forks Air Force Base” விமானப்படைத்தளத்தில் இரு விமானப்படையினர் தமக்குள் மாறிமாறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சம்பந்தப்பட்ட இரு வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை 04:30 மணியளவில் படைத்தளத்தின் வீரர்கள் உறங்கும் பகுதியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், எனினும் மேலதிக ஆபத்துக்களெதுவும் அப்படைத்தளத்தில் இல்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்காவில் தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலைக்கும், விமானப்படைத்தளத்தில் நடந்த சூட்டு சம்பவத்துக்கும் தொடர்புள்ளதாவென தகவல்கள் ஏதும் வெளிவரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments