அமேரிக்காவில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்!

You are currently viewing அமேரிக்காவில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்!

அமெரிக்காவின் பென்சில்வேனியா – பிலதெல்பியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இன்று காலையில் பிலதெல்பியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து ஸ்தலத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், 50 நிமிட போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

​இருப்பினும் இத் தீ விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.​

​குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 4 தீ கண்டறியும் கருவிகள் இருந்துள்ள நிலையில், அவை வேலை செய்யாமையே உயிரிழப்புகளுக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments