அம்பாறையிலும் தொடங்கியது நீதிக்கான போராட்டம்!

அம்பாறையிலும் தொடங்கியது நீதிக்கான போராட்டம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இன்று காலை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் தொடங்கி,

அகிம்சை வழியிலா சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கல்முனை திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு இன்று காலை பொத்துவில் பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவை வழங்கி உள்ளனர்.

இதே நேரம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுழற்சி முறையிலான போராட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி ,

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி, தாமோதரன் பிரதீபன் உள்ளிட்டோருடன் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள