அம்பிகையின் இலக்கு வெற்றி அடைய உறுதியாக செயற்படுவேன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்!

அம்பிகையின் இலக்கு வெற்றி அடைய உறுதியாக செயற்படுவேன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்!

பிரிட்டனில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்துள்ளார்.

காணொளி செய்தியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.நான் எனது தொகுதியில் ஆயிரக்கணககான தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து பெருமிதம் அடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை தீவில் தமிழர்களை பாதிக்கும் மோசமான பிரச்சினைகள் குறித்து அவர்கள் என்னுடன் எப்போதும் தொடர்புகொண்டவண்ணமுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.மிகவும் சமீபத்தில் மனித உரிமைகள் மற்றும் நீதி குறித்து மிகுந்த அக்கறையுள்ள இலங்கையில் பிறந்த அம்பிகையின் இதயத்தை தொடும் கதையை அவர்கள் தெரிவித்தனர் என அவர் குறிப்பிட்;டுள்ளார்.அவர் தற்போது மிகவும் கடினமான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்,காந்திய கொள்கைகளின் அடிப்படையிலும் இலங்கை தீவில் தமிழர்களை மிகக்கடுமையாக பாதிக்கும் தற்போதைய சில பிரச்சினைகளை வெளிப்படுத்த அமைதியாகவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.அவர் சமூகத்தினரும் நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற சமூகத்தினரும் நாங்கள் மனித உரிமைகளிற்கு ஆதரவளிக்கவேண்டும் அவரது உணவு தவிர்ப்பு போராட்டம் கருத்தில்கொள்ளப்படவேண்டும் என நான் வெளிவிவகார அமைச்சருக்கு எழுத வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள