அரசின் உதவிப் பொட்டலம் : வேலையை இழக்கும் மாணவர்களுக்கு கடன் நீடிப்பு!

அரசின் உதவிப் பொட்டலம் :  வேலையை இழக்கும் மாணவர்களுக்கு கடன் நீடிப்பு!

மாணவர்களுக்கான கூடுதல் கொரோனா பொட்டலம் ஒன்றை அரசாங்கம் தயார் செய்துள்ளது. வசந்த கால உதவித்தொகை முழுவதும் ஈஸ்டருக்குப் பின்னர் வங்கிக் கணக்கில் வரவுள்ளது. அதே நேரத்தில் கூடுதலாக, வேலையை இழந்தவர்களுக்கு மேலதிக உதவித்தோகையும் வழங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் நோக்கம், வருமான இழப்பு காரணமாக எந்த ஒரு மாணவனும் கல்வியிலிருந்து விலகுவதை தவிர்ப்பதாகும் என்று ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் Henrik Asheim (H) கூறியுள்ளார்.

மாணவர் உதவிப் பொட்டலத்தின் முக்கிய புள்ளிகள்:

  • ஏப்ரல் 15 ஆம் திகதி, அனைத்து மாணவர்களுக்கும் வசந்த காலத்தின் எஞ்சிய கால உதவித்தொகை வழங்கப்படும். ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான தொகை NOK 27,550 ஆகும்.
  • Lånekassen, அனைத்து மாணவர்களுக்கும் மேலதிக உதவித் தொகையாக NOK 26,000 வரை கடன் நிதி வழங்க முடிவு செய்துள்ளது.இதற்கான விண்ணப்ப காலக்கெடு வரும் ஏப்ரல் 15 ஆகும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் பட்ச்சத்தில் பணம் விரைவாக வங்கிக்கணக்கில் வைப்பிடப்படும்..

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments