அரசியல் அதிகாரத்து அசுரன்

அரசியல் அதிகாரத்து அசுரன்

இனப்படுகொலையாளிகளின் கைகுலுக்கு
இலங்கையில் நடக்கிறது!


பயங்கர வாதத்தை அழிக்க
பக்கபலமாக நின்றோமென
அப்பட்டமாக பொய்யுரைக்கும்
பாக்கிஸ்தானியின்
படுபாதகப்பேச்சு
கடுப்பேத்துகின்றது!

அடேய்
நீ கொடுத்த கந்தக்குண்டுகளால்
செத்துமடிந்தது
எங்கள் உறவுகளடா!
உன் வாய் பயங்கர வாதமென
பொய்யுரைப்பது
எங்களுக்காக  உயிரையே
தந்த உத்தமரடா!
எங்கள் உரிமையை காத்த
கொற்றவரடா!

நீ பயங்கர வாதமென்று
உளறுவதன் பொருளென்ன?


உன் நாட்டில் வந்து குண்டு போட்டார்களா?
உன் வீட்டில் வந்து பெண்களை
காமச்சேட்டைகள் புரிந்தார்களா?
நின் பிள்ளைகள் பாடசாலை சென்றபோது
விமான எச்சம்கொண்டு
பிய்த்துப் போட்டார்களா?
அல்லது
போகும் வழியில் வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டார்களா?

இத்தனையும்
நீ கை குலுக்குபவன்
செய்தான்!
பயங்கரவாதியோடு
கூடிக்குலாவிக்கொண்டு
குருடனாக நடிக்கும்
உன் போன்றோரின்
சுய அரசியலுக்காகவே
எம் மக்களின் உயிர்கள்
உங்களின் கொத்தணிக்
குண்டுகளால் குதறப்பட்டது!

நிச்சயமாக சொல்கின்றோம்
நீங்கள் சாவுகளை சந்திக்கும் போது
எள்ளளவும் கண்ணீர்கூட
சிந்தாது!
மாறாக
அரச அதிகாரங்களில் இருந்த
அசுரன் அழிந்தானென்ற
ஆனந்தமே எம்மை
ஆட்கொள்ளும்!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள