அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லூரில் கவனயீர்ப்பு போராட்டம்!

You are currently viewing அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லூரில் கவனயீர்ப்பு போராட்டம்!

அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்று(28) திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக உள்ள நல்லை ஆதீனமுன்றலில் இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைகளை கருத்தில் கொண்டு சுகாதார விதிமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் இடம்பெற்றது.

பகிர்ந்துகொள்ள