அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் – பாராளுமன்றில் இன்று விசேட பிரேரணை!

You are currently viewing அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் – பாராளுமன்றில் இன்று விசேட பிரேரணை!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் விசேட பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த , தனது பதவிநிலை அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த 12/09/21 அன்று மாலை 6 மணியளவில், நிறை போதைக்குள்ளான நிலையிலும் , அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் கொண்டுவந்து நிறுத்துமாறு பணித்திருந்தார்.

அவருக்கு முன் முழந்தாழிட்டு நிறுத்தப்பட்ட கைதிகளது தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்திருந்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினை குறித்து கட்சிதலைவரினால் பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டம் 27(2) இன் கீழ்முன்வைக்கப்படும் பிரேரணை / கேள்வி ஒன்றினை இன்று மேற்கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments