அரசு பணிக்காக தந்தையை கொன்ற கொடூர மகன்!

You are currently viewing அரசு பணிக்காக தந்தையை கொன்ற கொடூர மகன்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர், கீரனூர் திடீர் நகரைச் சேர்ந்த கருப்பையா. இவர் கடந்த 19-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரின் மகன் பழனியோ, அப்பா அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தார். போதையில், இருந்தவர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான், சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்த்துறை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்த்துறை விசாரணையும் நடந்து வந்தது. பிரேதப் பரிசோதனை முடிவில், இறந்து போன கருப்பையா குடித்த மதுவில் விஷம் கலந்து இருந்ததும், உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கருப்பையாவின் மகனைப் பிடித்து விசாரித்த போது அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது.

காவல்த்துறை விசாரணையில், இறந்து போன கருப்பையா தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருக்கிறார். அப்பா ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர் மரணமடைந்துவிட்டால், அப்பாவின் வேலை தனக்குக் கிடைத்துவிடும் என்று தப்புக்கணக்குப் போட்டுள்ளார். இந்த நிலையில் தான், மது குடிக்கும் பழக்கமுடைய தனது தந்தை கருப்பையாவுக்கு மது வாங்கிக்கொடுத்து அதில், விஷத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்.

விஷம் குடித்தும் கருப்பையா இறக்கவில்லை. இதற்கிடையே ஈச்சங்காட்டைச் சேர்ந்த ஆனந்த் என்பவருடன் சேர்ந்த பழனி, தந்தை கருப்பையாவை அடித்தே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்த்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அரசு வேலைக்காக பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments