அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு!

அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்.மாவட்டச் செயலக வாயிலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் காவல்த்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைக்காக மாவட்ட செயலகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்த இரு நபர்கள் அவரை மாவட்ட செயலக வாசலில் வைத்து வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தை சுற்றி காவல்த்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments