அறிவியல் உலகம்! ; அதிசயக்க வைக்கும் வேடிக்கையான மருத்துவ சிகிச்சை முறைகள்!

அறிவியல் உலகம்! ; அதிசயக்க வைக்கும் வேடிக்கையான மருத்துவ சிகிச்சை முறைகள்!

அறிவியல் மட்டுமில்லாது நோயை குணப்படுத்தும் என்று நம்பப்படும் உலகின் வேடிக்கையான பல மருத்துவ சிகிச்சை முறைகளும் உண்டு!

பெருவில் கர்ப்பிணி பெண்கள் வயிற்றை டால்பின் தொடுவதால், குழந்தையின் மூளையை நியூரானின் திறன் வளர்க்க தூண்டுகிறது.

டோக்கியாவில் நத்தைகளை முகத்தின் மீது விடுவதன் மூலம் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் தேவையற்ற திட்டுகளை அகற்றும் என்று அழகுகலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாக்டர் மீன் (Doctor Fish) என்று அழைக்கப்படும் இவற்றை கொண்டு மூட்டு மற்றும் தோல்களை பாதிக்கும் சொரியாஸிஸ் நோயை குணப்படுத்தும் என்கின்றனர். துருக்கியில் இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்தோனேசியாவில் தொடருந்து தடத்தின் மீது தலைவைத்து படுத்தால் அதிலிருந்து வரும் மின்சக்தி பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்று நம்புகின்றனர்.

கம்போடியாவில் ஆமைகளை முகத்தின் மீது தடவ விடுவதால் பரு, சூடு கட்டிகள் நீங்குதல், சர்ம வியாதிகள் குணமடையும் என்கின்றனர்.

ஹைதராபாத்தில் உயிருடன் மீனை விழுங்குவதன் மூலம் ஆஸ்துமா குணமவடைவதாக கூறப்படுகிது. மருத்துவ தன்மை கொண்ட இந்த மீன் வீடுகளில் வளர்க்கப்படும்.

ரஷ்யாவில் பனிபடலங்களின் மீது குளிர்ந்த நீரை சிறுவர்கள் மீது ஊற்றுவதன் மூலம் அவர்கள் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும் என்கின்றனர்.

கெய்ரோவில் ஒரு மலைப்பகுதியில் வெப்பமான நேரத்தில் முழு உடலையம் மணலில் புதைக்கப்படுவதன் மூலம் வாத நோய், மூட்டு வலி மற்றும் பாலியல் இயலாமை குணப்படுத்தப்படுகிறது.

சீனாவில் முக முடக்கு நோயை குணப்படுத்த பராம்பரிய சிகிச்சையான இறந்த தேள் மற்றும் இஞ்சி செதில்களை முகத்தின் மீது வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.

கம்போடியாவில் மாட்டு கோமியத்தில் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் சக்திகள் உள்ளதாக உள்ளூர்வாசிகள் பலர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

தாது மண் மூலமாக உடலை மறைத்தால் நரம்பு நோய்கள் குணமடையும் என்பது சீனாவின் பழமையான சிகிச்சை.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments