அளம்பில் பகுதியில் குடுவுடன் இருவர் கைது!

You are currently viewing அளம்பில் பகுதியில் குடுவுடன் இருவர் கைது!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இன்று 18.11.20 காலை சிறப்பு அதிரடிப்படையினரால் 10 கிராம் குடு போதைப்பொருளுடன் இருவரை கைதுசெய்துள்ளார்கள்.
வேப்பங்குளம் அடம்பன் மன்னாரினை சேர்ந்த 42 அகவையுடைய குடும்பஸ்தர் உண்ணாப்பிலவு முல்லதை;தீவினை சேர்ந்த 18 அகவையுடைய இளைஞன் ஆகியோரே சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறப்பு அதிரடிப்படையினரால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள் இவர்களை 19.11.2020 மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள