அளம்பில் பகுதியில் விவசாய காணியின் வேலியினை வெட்டி சாய்த்த நாசகாரிகள்!

அளம்பில் பகுதியில் விவசாய காணியின் வேலியினை வெட்டி சாய்த்த நாசகாரிகள்!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் தனிநபர் ஒருவரின் காணியை சுற்றியுள்ள வேலியினை வெட்டி சாய்த்துள்ளதுடன் தூண்களையும் அடித்து நொருக்கியுள்ளமை குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.
அளம்பில் பகுதியில் காணிக்கு உரித்தான ஒருவரின் காணியினை பலர் அடாத்தாக பிடிக்க முற்பட்டுள்ளார்கள் இன்னிiயில் காணியில் நிலக்கடலை செய்கை மற்றம் தெங்கு செய்கையினை மேற்கொண்டு சுற்றிவர தூண்கள் நட்டு வேலி அடைத்துள்ளார் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நாசகாரிகள் நேற்று இரவு (14.11.2020)வேலியினை வெட்டி சாய்த்துள்ளதுடன் தூண்களையும் அடித்து நொருக்கி முள்ளு கம்பிகளை துண்டு துண்டாகவெட்டியுள்ளார்கள்.
இதன்போது 20 வேலி தூண்கள் அடியுடன் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் வேலியும் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது காணிக்குள் 50 தென்னப்பிள்ளைகள் மற்றும் நிலக்கடலை செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த நாசகார செயல் இடம்பெற்றுள்ளதாக காணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது சுமார் இரண்டு இலட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸ் நலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments