அவசரகாலச் சுகாதார நிலை மேலும் இரண்டு மாதங்கள் நீடித்தது பிரான்ஸ்!

அவசரகாலச் சுகாதார நிலை மேலும் இரண்டு மாதங்கள் நீடித்தது பிரான்ஸ்!

கொரோனாத் தொற்றினால் உள்ளிருப்து ஆரம்பித்துச் சிலநாட்களில், அதாவது மார்ச் 24ம் திகதி, பிரான்ஸ் அரசாங்கம் சுகாதார அவசரநிலையைப் (état d’urgence sanitaire) பிரகடணப்படுத்தியது.

இந்தச் சுகாதார அவசரகால நிலை,சுகாதாரம் மற்றும் உள்ளிருப்புக் கட்டுப்பாடுகள் விடயத்தில் மேலதிக அதிகாரங்களைப் பிரதமருக்கு வழங்கியிருந்தது.

இன்று நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனை சபைக் கூட்டத்தின் முடிவில், இந்த அவசரகாலச் சகாதார நிலையை மேலும் இரண்டு மாதங்கள் நீடித்து, ஜுலை 24ம் திகதிவரை பிரகடணப்படத்தி உள்ளனர்

முதற்கட்டப் பிரகடணம், மே மாதம் 24ம் திகதி முடிவடைவதால், உடனடியாக சுகாதார அவசரகாலநிலையை நீக்கினால், கட்டுப்பாடுகள் தளர்ந்து, இரண்டாவது கொரோனாத் தொற்றலையை ஏற்படுத்திவிடும் என்றும், அதனைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் எதுவார் பிலிப், இந்தச் சுகாதார அவசரகாலநிலை நீட்டிப்பை இன்று அறிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments