அவசர உதவிகளோடு அமெரிக்காவில் தரையிறங்கிய ரஷ்யா! “கொரோனா” அதிர்வுகள்!!

அவசர உதவிகளோடு அமெரிக்காவில் தரையிறங்கிய ரஷ்யா! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பரவலினால் உலகளாவிய ரீதியில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவுக்கு உதவுமுகமாக, ரஷ்யாவிலிருந்து அவசர மருத்துவப்பொருட்களும், உபகரணங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தமக்கான அவசர மருத்துவ உதவிகளை வழங்குமாறும், “கொரோனா” வுக்கெதிரான போரில் தம்மோடு கைகோர்க்குமாறும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசி மூலம் வேண்டுதல் விடுத்திருந்ததாகவும், அதனைத்தொடர்ந்து, ஒரு தொகுதி மருத்துவ சாதனங்களும், செயற்கை சுவாசம் வழங்கக்கூடிய சாதனங்களை ஏற்றிய ரஷ்ய விமானமொன்று, நியூயோர்க்கில் தரையிறங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் பேச்சாளரான “Morgan Ortagus”, ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மேற்படி மருத்துவ உபகரணங்களை தாம் ரஷ்யாவிடமிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளவில்லையென்றும், எனினும், இதற்காக ரஷ்யாவுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பது பற்றி குறிப்பிட விரும்பவில்லையென்றும் தெரிவித்துள்ளதோடு, இரு நாடுகளும் கடந்தகாலங்களில் பேரிடர்களின்போது ஒருவருக்கொருவர் உதவியாக இருந்துவந்ததாகவும், எதிர்காலத்திலும் இது தொடருமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments