அஸ்கரில், துப்பாக்கியால் மிரட்டி ஜோக்கர் கடையில் கொள்ளை!

அஸ்கரில், துப்பாக்கியால்  மிரட்டி ஜோக்கர் கடையில் கொள்ளை!

Asker, Billingstad இலுள்ள Joker கடையில் கொள்ளையடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒஸ்லோ காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். துப்பாக்கியைக் கொண்டு மிரட்டிய நான்கு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து ஓடியுள்ளனர்.

காவல்துறையினர் முதலில் ஒருவரையும், பின்னர் இருவரையும் கைது செய்துள்ளதுடன், நான்காவது நபரை தேடிவருகின்றனர்.

இதனால் எவரும் உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து தேடுதல் நடைபெறுகின்றது என்றும் செயல்பாட்டு மேலாளர் ‘Gjermund Stokkli‘ கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 15.36 மணிக்கு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது என்றும், கொள்ளை தொடர்பான காணொளி பதிவுகள் இருக்கின்றதா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது .

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments