ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து!

You are currently viewing ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து!

 

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து! 1

 

 

 

 

 

 

 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பஸ் இன்று புதன்கிழமை (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பத்துடன் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பேருந்தில்   பயணித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் விபத்தில் காயங்களுக்கு உள்ளாகினர்

விபத்தில் காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் சிறீலங்கா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இதேபோன்று 5 இளைஞர்கள் விபத்தில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply