ஆதரவளித்த நாடுகளுக்கு பிருத்தானியா நன்றி நவிலல்!

ஆதரவளித்த நாடுகளுக்கு பிருத்தானியா நன்றி நவிலல்!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஆதரவளித்த மற்றும் இணைத்தலைமை நாடுகள் குழுவின் ஏனைய நாடுகளுக்கும் ஜெனீவாவிற்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் ப்ரெய்த்வெய்ட் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ருவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் என்பது முக்கியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இத்துப்போன தீர்மானத்தின் முடிவுக்கு காரணமாக இருந்து தமிழ் மக்களின் உரிமைக்காக பேரம்பேசாது பாதம் தடவிய கூட்டமைப்பும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள