ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை முளைத்துள்ளது!!

ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை முளைத்துள்ளது!!

இன்று குருந்தூர் மலையில் திடீரென புத்தர் ஒன்றை வைத்து வழிபட ஆரம்பித்துள்ள சிங்களவர்கள் தமிழர்களின் பாராம்பரியமான  சிவன் கோயில் இருந்த இடத்தை தமது பூர்வீக இடமென நிறுவவதற்காக புத்தர் சிலையொன்றை அங்கு வைத்திருக்கிறார்கள்.

 இதே வேளை இதற்கு எதிரான செயற்பாடுகளிற்கு மக்களை அணி திரளுமாறு சமூகவலைத்தளங்கள் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

நேற்றைய தினம் ​குருந்தூர் மலை, ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அளவிடும் பணிகள் நடந்த நிலையில் நேற்றைய தினம் அங்கு மிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ கஜேந்திர குமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் ஏனைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவசெல்வம் அடைக்கலநாதன் வினோ மற்றும் பிரதேசசபைத்தவிசாளர் உறுப்பினர்களும் சென்று பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் சிலை உடைக்கப்பட்ட போது  மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டமொன்றை ஆரம்பித்து கவனத்தை ஈர்த்து வெற்றி கொண்டது போல் குருந்தூர் மலையை மீட்பதற்கும் அடியவர்கள், உணர்வாளர்கள், புலமையாளர்கள், புலம்பெயர்ந்தோர் தன்னெச்சியான முயற்சியை மேற்கொள்ளவேணுமென பல தரப்புகள் சிந்தித்து வருவதாக தெரியவருகிறது


இன்று

ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை முளைத்துள்ளது!! 1

நேற்று

ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை முளைத்துள்ளது!! 2
குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு பௌத்த வழிபாடுகளுடன் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகவும் 1932 இல் வர்த்தமானியில் பிரசுரிக்க பட்ட ஆலயம் இருந்ததாக தெரிவித்து இராணுவத்தின் பிரசன்னத்தோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
(தண்ணிமுறிப்பு குளத்துக்கு அண்மையாகவுள்ள படலைகல்லு என்னும் இடத்திலும் இன்னுமொரு விகாரைக்கான தொல்லியல் அகழ்வுகள் இன்று ஆரம்பிக்கபட்டுள்ளது. இந்த இடம் கல்யாணபுர என அடையாள படுத்த பட்டுள்ளது.)
ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை முளைத்துள்ளது!! 3
ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை முளைத்துள்ளது!! 4
ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறிய பட்டு புத்தர் சிலை முளைத்துள்ளது!! 5
பகிர்ந்துகொள்ள