ஆனையிறவில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

ஆனையிறவில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெப் ஒன்றை சோதனைக்குட்படுத்திய போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பயணப் பொதியொன்றில் வைக்கப்படிருந்த 2 கிலோ 100 கிராம் கேரள கஞ்சா மற்றும் 71,240 ரூபா பணம் ஆகியன சந்தேக நபர்களிடமிருந்து றிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை, இயக்கச்சி மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள