ஆபிரிக்க நாடான “மாலி” யில் இராணுவப்புரட்சி! அதிபர், பிரதமர் கைது!!

ஆபிரிக்க நாடான “மாலி” யில் இராணுவப்புரட்சி! அதிபர், பிரதமர் கைது!!

ஆபிரிக்க நாடான “மாலி”யில் அந்நாட்டு இராணுவம் ஆட்சிப்பொறுப்பை கையிலெடுத்துள்ளது.

நாடு முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அந்நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ஐ.நா.சபை மாலியின் இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனினும், நாட்டை நிர்வகிப்பதற்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்படுமெனவும், கூடிய விரைவில் மறு தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தெரிவி செய்யப்படுமெனவும் இராணுவத்தலைமை அறிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments