ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் இருவர் பலி!

ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் இருவர் பலி!

ஆப்கானிஸ்தானில் தெற்கு பகுதியில் காந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியது.

இதில் அமெரிக்க வீரர்கள் பயணித்த வாகனம் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு உடனடியாக பொறுப்பு ஏற்றது.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு சுமார் 2,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!