யுத்த காலத்தில் தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்க தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களை பயன்படுத்தினார்கள்
யுத்தத்திற்கு பின்னரும் தமிழ் சமூகத்தின் அரசியலை அமைதியாக்க பல்வேறு தரப்புகளை பயன்படுத்தப்படுவதை ஆட்சியாளர்கள் கொள்கையாகவே வைத்திருக்கின்றார்கள்
கடந்த காலங்களில் அருண் சித்தார்த்தின் ஆவா குழு, கிரீஸ் மனிதன் என பல்வேறு பொறிமுறைகள் ஊடக தமிழ் மக்களை அச்சுறுத்தவும் அமைதியாக்கவும ஆட்சியாளர்கள் முயற்சித்து இருக்கின்றார்கள்
அந்த வகையில் தற்போது அர்ச்சனா இராமநாதன் என்கிற Unstable Mindset உள்ள நபரை தற்போது பயன்படுத்தி முயற்சிக்கின்றார்கள்
இந்த மனிதன் தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை எதிலும் ஒழுக்கம் இல்லாதவர்.
அடிப்படை மனித அறம் இல்லாதவர்.
சமூகமயப்படாதவர்
எந்தவிதமான குற்றுணர்வும் இல்லாதவர்.
அந்தவகையில் தமிழ் சமூகத்தின் அரசியலை ஓர் ஒழுங்கிற்குள் வைத்திருப்பதற்கு ஆட்சியாளர்க்ளுக்கும் அவர்களின் புலனாய்வு தரப்பிற்கும் இவர் தேவையானவராக இருக்கின்றார்கள்
அதனால் தான் முஸ்லிம் சமூகத்தை விரட்டினது தவறு இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும் என இந்த மனிதன் பேசிய போது கூட வேடிக்கை பார்த்தார்கள்
அதே போல மலையக மக்கள் குறித்து சமூக வன்முறைகளை உருவாக்கும் வகையில் மிக மோசமாக அவதூறு பேசிய போது கூட ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்தார்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள பௌத்த விகாரையை தாக்கி கலவரத்தை உருவாக்க தமிழ் தரப்பில் திட்டமிடுவதாக அர்ச்சனா இராமநாதன் ஆங்கில ஊடகமொன்றில் இன வன்முறையை உருவாக்கும் வகையில் பொய்யை பரப்பிய போதும் கூட ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை
சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் வி*டுதலை பு*லி*கள் அமைப்புக்கு சொந்தமான ஆயுதங்களும் அடங்கியிருந்தன என்று கூட இந்த மனிதனை பாராளமன்றத்தில் எந்த பொருளுமின்றி பொய் சொல்லவைத்தார்கள்
விசேடமாக பாராளமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தவும் விவாதங்களை திசை திருப்பவும் இந்த மனிதனின் ஆபாச பேச்சுக்களை கூட அனுமதிக்கின்றார்கள்
அண்மையில் பெண் பாராளமன்ற உறுப்பினர் ஒருவரோடு இவர் ஆபாசமாக தர்க்கித்த விவகாரம் பொதுவெளியில் கூட பேச முடியாமால் இருந்தது
சம நேரத்தில் இந்த நபரை பயன்படுத்தி மிக சாதரணமான மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்கள்
சட்டவிரோத தையிட்டி விகாரையை நியாயப்படுத்த பாதிக்கப்பட்ட மக்களிடம் காணி உறுதி இல்லை என சொல்லவைக்கின்றார்கள்
சமூக மற்றும் அரசியல் ரீதியாக பேச அல்லது போராட முற்படுகின்ற பல்கலை கழக மாணவர் உட்பட சகல தரப்புகள் மீதும் ஆபாசமாக பேச இவரை பயன்படுத்துகின்றார்கள்
அண்மையில் கூட சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அவதூறு பரப்ப இந்த மனிதனை பயன்படுத்தியிருந்தார்கள்
அதே சமயம் மிக நுட்பமாக இராணுவத்தினரை அவர்களின் இருப்பை புனிதப்படுத்தி நியாயப்படுத்தவும் இந்த மனிதனை உபோயோகிக்கின்றார்கள்
இது போதாதென்று தமிழ் பொது சிவில் நிர்வாக கட்டமைப்புகளை நிர்மூலமாக்கும் வகையில் அவதூறு பரப்பவும் இவரை பயன்படுத்துக்கின்றார்கள்
பொய்களை பரப்பி எது உண்மை என்பதில் வேண்டுமென்றே குழப்ப நிலையை ஏற்படுத்தி,என்ற சமூக மட்டத்தில் கூட்டு உளவியல் சிக்கலை உருவாக்கி அதனை தமக்கேற்றவாறு பயன்படுத்துவது அரசு இயந்திரங்களிற்கு வழமையானது.
இந்த மனிதன் பரப்பிய சகல ஆதாரமற்ற பொய்களையும் கோர்வையாக தொடர்புறுத்தி பார்த்தால் iதன்னை புரிந்து கொள்ள முடியும்
இதன் தொடர்ச்சியாக இன்று தனியார் காணி விவகாரத்தில் அர்ச்சனா இராமநாதன் என்கிற குற்றவுணர்வு அற்ற மனிதன் ஒரு பச்சிளம் குழந்தையின் தாயை கைத்து*ப்பாக்கி காட்டி அச்சுறுத்தியமை Criminal Law வின் கீழ் மிகவும் தண்டிக்கப்படவேண்டிய மிக கடுமையான குற்றமாகும்.
ஆனால் தற்காப்புக்காகவே கைத்து*ப்பாக்கியை இந்த மனிதன் பயன்படுத்தினார் என இலங்கை பொலிஸ் சித்தரித்து குழந்தையுடன் ஒரு அபலை பெண்ணை மிக வேகமாக சிறையில் அடைத்து பொலிஸ் இவரை பாதுகாத்திருக்கின்றது
இந்த மனிதன் தான் எதிர்கொள்ளும் குற்ற வழக்குகள் மற்றும் வைத்திய சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டமை உட்பட பல்வேறு சிக்கல்களிருந்து விடுபட அரச இயந்திரம் பாதுகாக்கும் என நம்புகின்றார்
தங்கள் தேவைகள் முடிய அரச இயந்திரம் தங்கள் தேவைக்கு பயன்படுத்தியவர்களை எவ்வாறு கைவிடும் என்பதற்கு திருவாளர் பிள்ளையான் வரலாற்றை இந்த மனிதன் தெரிந்தகொள்ள வேண்டும்.
-இனத்தின்குரல்-






