ஆறுகால்மடம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

You are currently viewing ஆறுகால்மடம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட சிறீலங்கா காவற்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறீலங்கா காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு சிறீலங்கா காவற்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply