ஆறுமுகம் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்!

ஆறுமுகம் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்!

இ.தொ.க. வின் தலைவரும் அமைச்சருமான அமர்ர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியில் சங்கமமாகியது.

கடந்த 26 ஆம் திகதி மரணமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமைக்காரியாலயம் சௌமிய பவனில் வைக்கப்பட்டு அதனையடுத்து அவரது சொந்த ஊரான வெவண்டனுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டக்கலைக்கு கொண்டுவரப்பட்டு இ.தொ.க காரியாலயமான CLF இல்வைக்கப்பட்டது.

படையினரின் பலத்த பாதுகாப்போடு இன்று பிற்பகல் கொட்டகலையிலிருந்து அட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி நின்று மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்.

பிரமுகர்களின் இரங்கல் உரையை அடுத்து அன்னாரின் பூதவுடல் அரச மரியாதையுடன் அக்னியுடன் சங்கம்மாகியது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments