ஆற்று மண் எற்றச் சென்ற ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது!!

ஆற்று மண் எற்றச் சென்ற ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்தப்பாலம் அருகில் ஆற்றில் மாட்டுவண்டியில்  காணாமல் போயுள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (29) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

கொடுவாமடு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய கதிர்காமத்தம்பி மயில்வாகனம் என்பவரே இவ்வாறு முதலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் வாழ்வாதாரமாக கறுத்தப்பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் ஆற்று மண்ணை அகழ்ந்து மாட்டுவண்டியில் ஏற்றிச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று புதன்கிழமை (29) காலை குறித்த ஆற்றில் மாண்டு வண்டியில் சென்று ஆற்று மண் அகழ்வில் தனிமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முதலை அவரை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து ஆற்றுப் பகுதியில் இருந்த மாட்டுவண்டி மற்றும் மாடுகளை மீட்கப்பட்டதுடன் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் காவல்த்துறையினர் மற்றும் அவரின் உறுவினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments