ஆஸ்திரேலிய திறந்த சுற்று வலைப்பந்துப் போட்டி ; இறுதிப்போட்டியில் டொமினிக் திம்!

ஆஸ்திரேலிய திறந்த சுற்று வலைப்பந்துப் போட்டி ; இறுதிப்போட்டியில் டொமினிக் திம்!

ஆஸ்திரேலிய திறந்த சுற்று வலைப்பந்துப் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய திறந்த சுற்று வலைப்பந்து தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா), தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்தித்தார்.

இதில் முதல் சுற்றை பறிகொடுத்த டொமினிக் திம் அதன் பிறகு எழுச்சி கண்டு Tiebreak வரை போராடி ஸ்வெரேவின் சவாலுக்கு முடிவு கட்டினார். 3 மணி 42 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் டொமினிக் திம் 3-6, 6-4, 7-6 (7-3), 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய திறந்த சுற்றில் ஆஸ்திரியா நாட்டு வீரர் ஒருவர் இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் அவர் நடப்பு வெற்றியாளர் நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகிறார். இது குறித்து டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் திறந்த சுற்றில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு வந்து, ரபெல் நடாலிடம் தோற்று இருக்கிறேன். இப்போது ஜோகோவிச்சை சந்திக்க உள்ளேன். இவர் ஆஸ்திரேலிய திறந்த சுற்றை 7 முறை வென்றவர். அவருக்கு எதிராக எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்’ என்றார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments