இசை பிரியர்களே காது கவனம்!

இசை பிரியர்களே காது கவனம்!

இன்றைய உலகில் பெரும்பாலும் தலையணி உபகரணங்களை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது, அதேபோல உலகசந்தையிலும் அதிகமான நிறுவனங்களும் தலையணி உபகரணங்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது, தங்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக பயன்படுத்தும் தலையணி உபகரணங்களால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை நாளடைவில் தான் அதன் பாதிப்பை உணர்கின்றனர்.

நமது காதுகளால் 65 டெசிபெல் வரை ஒரு ஒலியை தாங்க முடிகிறது, ஆனால் நாம் பயன்படுத்தும் தலையணியின் ஒலி குறைந்தது 100 டெசிபெல் ஆகும். அதாவது 100 டெசிபெல் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கு மேல் நாம் தலையணியில் ஒலியை கேட்டால், நாம் காது கேளாத நிலையை அடைந்துவிடும்.

நாம் தலையணி பயன்படுத்துவதினால் நம் காதுகளில் உள்ள செல்களின் மீது மிகவும் தவறான தாக்கத்தை எதிர்கொள்கிறோம். தலையணியை தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை நாம் உபயோகிப்பதால் நம் காதுகளில் உள்ள செல்கள் சிதைகின்றனர், அதே போல வேகமாக கிருமிகளும் தோன்றுகின்றது.

தலையணி பயன்படுத்துவதினால் தலைவலி, தூக்கமின்மை, மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் நாம் பாதிப்படைகின்றோம், நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால்! தலையணி பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments