இணைந்து வாழவேண்டும், இல்லையேல் வடக்கு – கிழக்கில் இரத்த ஆறு ஓடும்

இணைந்து வாழவேண்டும், இல்லையேல் வடக்கு – கிழக்கில் இரத்த ஆறு ஓடும்

இது சிங்கள பௌத்த நாடு. தமிழர்கள் தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அவ்வாறன்றி, சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும்

இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வை வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த போது அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

மேற்படி கடும்போக்கு சிங்கள தேரர்கள் மேலும் கூறுகையில்

தமிழர்களுக்கு சமஷ்டி வழியில் தீர்வு வழங்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தனிநாடு கோரி மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும். மீண்டும் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட நாம் விரும்பவில்லை.

ராஜபக்ஷக்களின் இந்த ஆட்சிக்காலத்தில் அரசுடனும் சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும். அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

இது சிங்கள பௌத்த நாடு. தமிழர்கள் தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.

பிரபாகரனின் சிந்தனையில் செயற்படுவதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும்.’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments