இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராசகுமாரா!!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராசகுமாரா!!

பதவிக்காக    ஈ பி டி பி  ஒட்டுக்குழுவுடன் இணைந்து மணிவண்ணன் செய்யும் பச்சைத்துரோகம்  அம்பலம்


என்றோ ஒருநாள் நாம் செய்யும் துரோகம் வெளிவந்தாகும். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு  தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியிலிருந்து  வெளியேற்றப்பட்ட மணிவண்ணன். 

ஈ பி டி பி ஒட்டுக்குழுவுடன் இணைந்து , யாழ் மாநகர சபை மேயர் நாற்காலியை கைப்பற்றியுள்ளார்.


ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளசு அவர்கள் மூப்புநிலை காரணமாக , தனக்கு பின்னான வாரிசுக்களை எங்கெல்லாமோ தேடினார். தகைமைகளாக பதவி ஆசை, தன்னினத்துக்கான உச்ச துரோகம் , சிங்கள் பேரினவாத அரசுக்கு சமரசம் வீசி அடிவருடியாக இருத்தல் என்பன வைக்கப்பட்டான.

எல்லா வகையான தேர்விலும் முதலாவதாக மணிவண்ணன் என அழைக்கப்படும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் என இடித்துரைத்துள்ளார்.

இதேவேளை கடந்த முறை மேஜர் பதவியை கைப்பற்றுவதற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட்டிருந்தார் இப்போது தமிழ்த்தேசிய முக்கள் முன்னணியை சிதைக்கலாம் எனும் கனவோடு எதிரியோடு எதிரியாக களமிறக்கப்பட்டிருக்கின்றார்.

இதிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும் ஏன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இவரை விலக்கியதென்று, உள்ளே இருந்து கடசியை உருக்குலைக்க வெளிப்பட்டதன் அல்லது விலைப்பட்டதன் காரணமே அவ்வாறான முடிவுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரக்காரணமாக அமைந்தது.

https://www.facebook.com/335638133125791/posts/3634738503215721/

பகிர்ந்துகொள்ள