இதுவரை இந்திய விமான விபத்தில் 270 பேர் பலி!!

You are currently viewing இதுவரை இந்திய விமான விபத்தில் 270 பேர் பலி!!

கடந்த வியாழக்கிழமை ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 60 வினாடிகளுக்குள், விமானம் உயரத்தை இழந்து பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையில் மருத்துவர் விடுதி கட்டடத்தின் மீது மோதியது.

இந்த விபத்தின் தொடர்ச்சியாக, 270 பேரின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக கல்லூரியின் ஜூனியர் மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் தவால் கமேட்டி கடந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் (அதாவது 241 பேர்) உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 13:39 மணிக்கு (08:09 GMT) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், ஏழு போர்த்துகீசியர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவர் இருந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையின் டீன், மருத்துவர் மினாக்ஷி பரிக் பேசுகையில், “விமானம் வளாகத்தில் உள்ள கட்டடங்கள் மீது மோதியதில் 4 மாணவர்கள் இறந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.

“விமானம் விபத்துக்குள்ளானபோது வளாகத்தில் இருந்த எங்கள் மருத்துவர்களின் நான்கு உறவினர்களும் இங்குதான் இருந்தனர். அவர்களும் உயிரிழந்துள்ளனர்,” என்று மருத்துவர் பரிக் கூறினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply